கவிதை

முதல் நடவு

இந்தியா இளைஞர்களின் தோட்டம்;
கல்வியால் உயரும் கோட்டம்.

இரண்டாம் நடவு  

கேட்பதெல்லாம் வினா;
காண்பதெல்லாம் கனா;  
சொற்களின் உளி பேனா.

மூன்றாம் நடவு  

மங்காத அழகை என்னில் கொண்டேன்;
மயங்காத அழகை உன் கண்ணில் கண்டேன்.  

நான்காம் நடவு  

நதிகளுக்கு துணையாக கறை இருக்கு;
மனதில் ஆயிரம் குறை இருக்கு;
தீர்வுக்கு வழி திருமுறை இருக்கு.  

ஐந்தாம் நடவு  

வெட்டி வெட்டி படித்தேன் சொல் கிடைத்தது;
தட்டி தட்டி புடைத்தேன் நெல் கிடைத்தது.

ஆறாம் நடவு  

தனியாக நெடுந்தூரம் நடக்கிறேன்;
துணையாக உன் கரம் பிடிக்கிறேன்.

ஏழாம் நடவு  

மலர் உதிர உதிர பூக்கும்;
மனம் சிதற சிதற தேக்கும்.

எட்டாம் நடவு  

செயல் சிந்தனையின் அடுக்கு;
சிந்தனை செயல்பாடுகளின் தடுக்கு.

ஒன்பதாம் நடவு  

காலத்தால் காண்பது கனவா;
காப்பியத்தால் நூற்பது செலவா.

பத்தாம் நடவு  

தினந்தோறும் அறிவில் பதிப்பிக்கிறேன்;
வெவ்வேறு சிந்தனையை புதுப்பிக்கிறேன்.

பதினொன்றாம் நடவு  

புன்னகையில் பூக்களாய் பூக்கிறாய்;
கண் அசைவில் காந்தத்தையே சாய்க்கிறாய்.

பனிரெண்டாம் நடவு  

வானில் தீப ஒளியாக பூத்தாயா;
வண்ணங்களால் நிறைந்த இந்தியாவை பார்த்தாயா.

பதிமூன்றாம் நடவு  

மங்கையின் கேள்விக்கு ஓவிய மதில் போதுமா;
மன்னனின் சொற்கள் பூட்டிய பதில் வேண்டுமா.

பதிநான்காம் நடவு  

அன்பால் தொழுது வாழும் வீடு;
உழைப்பால் உழுது எழும் தமிழ்நாடு.

பதினைந்தாம் நடவு  

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்;
கள்வருக்கும் இக்கால வாழ்வு சிறக்கும்.
திருந்தி வாழ்ந்தால் உலகு செழிக்கும்.

பதினாறாம் நடவு  

உனக்காக என் உயிரைக் கொடுத்தேன்;
தமிழுக்காக கைவிரலில் சொற்களைத் தொடுத்தேன்.

பதினேழாம் நடவு  

தெய்வத்தின் பாடலை உலகமெங்கும் மலரக் கண்டேன்;
மழலையின் தேடலை நாவால் உளரக் கண்டேன்.

பதினெட்டாம் நடவு  

உன் சிகை அலங்காரத்தில் சித்திரம் செதுக்கு;
என் சிந்தனைக்கு எதிராக தொடுப்பாய வழக்கு.

பத்தொன்பதாம் நடவு  

சிந்தனையை நதியில் விடு;
செயல்களை சிகரத்தில் நடு.

இருபதாம் நடவு  

அறிவை ஆய்ந்து கொடு;
அறிவியலை ஆராய்ந்து தொடு.

மரகதவள்ளி நடவு  

சின்ன சின்னதாய் ஒலிகொடுத்தேன்;
என் சிந்துக்கவி பாடலுக்கு வழிகொடுத்தேன்.

குழகன் நடவு  

அன்பின் வழி அமைதியால் நிலைக்கட்டும்;
வெற்றியின் வழி மனஉறுதியால் சிறக்கட்டும்.

வெற்றிவேல் நடவு  

சிந்தனை அன்றி செயல்கள் சிறக்காது;
சோதனை இன்றி நல்வழி பிறக்காது.

வேந்தன் நடவு  

தமிழ் எனும் மாலையை சுற்றிக்கொண்டேன்;
தமிழன் எனும் பண்பாட்டை பற்றிக்கொண்டேன்.

கண்ணன் நடவு  

கடல் ஓய்ந்தால் அலை வராது;
கனவு ஓய்ந்தால் வெற்றி தராது.

கண்மணி நடவு  

தேன் சுவைக்க சுவைக்க இனிக்கும்;
தமிழ் படிக்க படிக்க மனக்கும்.

அழகன் நடவு  

ஆள் இல்லாத போது அன்பு புரியும்;
தமிழ் படிக்காத போது உயிர் பிரியும்.

பொன்னி நடவு  

அவள் புன்னகை விலை தெரியாது எனக்கு;
இந்த பூமியின் நிலை புரியாது உனக்கு.

ஒய்யம்மாள் நடவு  

காளையரின் வீரம் சோதிக்க கிடைத்தது ஜல்லிக்கட்டு;
மங்கையரின் ஞானம் சாதிக்க படைத்தது கல்வெட்டு.

பொன்னன் நடவு  

தமிழ் படிக்க படிக்க மறக்கும்;
கலை செதுக்க செதுக்க சிறக்கும்.

பொற்கொடி நடவு  

வேதனையை வியர்வையாய் துடைத்து விடு;
சாதனையை சரித்திரமாய் படைத்து விடு.

நாதன் நடவு  

இயந்திரம் போல் இறைவன் சோதிக்கிறான்;
இடும்பைப் போல் இயலாமையிலும் சாதிக்கிறான்.

சொர்ணவள்ளி நடவு  

கண்ணை சொக்க வைப்பது காற்றின் விசை;
மனதை தக்க வைப்பது தமிழின் இசை.

வேலன் நடவு  

தோல்வியின் இடுக்கில் துணித்து வாழு;
வெற்றியின் மிடுக்கில் பணிந்து ஆளு

மீனாட்சி நடவு  

முடியாது என்ற சொல் முதியவருக்கு சொந்தம்;
முடியும் என்ற சொல் தொப்புள்க்கொடி பந்தம்

2 comments: